“இது என்னடா புது கூத்தா இருக்கு..” நள்ளிரவில் சிலிண்டர் டெலிவரி செய்யப் போன வாலிபருக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்த மக்கள்.. தாலி கட்டிய கையோடு மாப்பிள்ளை வைத்த ட்விஸ்ட்.. உச்சகட்ட பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது என்னடா புது கூத்தா இருக்கு..” நள்ளிரவில் சிலிண்டர் டெலிவரி செய்யப் போன வாலிபருக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்த மக்கள்.. தாலி கட்டிய கையோடு மாப்பிள்ளை வைத்த ட்விஸ்ட்.. உச்சகட்ட பரபரப்பு..!!

Published

on

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், நள்ளிரவு நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யச் சென்ற இளைஞரைக் கிராம மக்கள் பிடித்துக் கட்டாயத் திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபிஷேக் குமார் என்ற அந்த இளைஞர், நள்ளிரவில் இளம்பெண் ஒருவரின் வீட்டில் இருந்தபோது கிராம மக்களிடம் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். அப்போது, அந்தப் பெண் அழைத்ததன் பேரிலேயே தான் கேஸ் சிலிண்டர் கொடுப்பதற்காக வந்ததாக அபிஷேக் விளக்கமளித்தார்; ஆனால் நள்ளிரவு நேரத்தில் சிலிண்டர் டெலிவரியா எனச் சந்தேகமடைந்த கிராம மக்கள் அவரது பேச்சை நம்ப மறுத்து, இருவரையும் அருகிலுள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர்.

இந்தத் திருமண விவகாரத்தில் இளைஞரும், இளம்பெண்ணும் முற்றிலும் மாறுபட்ட தகவல்களைத் தெரிவித்துள்ளனர். கிராம மக்கள் தன்னை மிரட்டிக் கட்டாயப்படுத்தியே தாலி கட்ட வைத்ததாக அபிஷேக் குமார் குற்றம்சாட்டுகிறார். ஆனால், தாங்கள் இருவரும் கடந்த 8 முதல் 9 மாதங்களாகக் காதலித்து வருவதாகவும், தன்னைப் பார்ப்பதற்காகவே அபிஷேக் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதாகவும் அந்த இளம்பெண் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவிலில் குங்குமம் வைத்துத் திருமணம் முடிந்த பிறகு, மணப்பெண்ணைத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டிய நேரத்தில் அபிஷேக் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுப் பிரச்சினை காவல் நிலையம் வரை சென்றது. இதையடுத்து, அபிஷேக் மற்றும் அந்த இளம்பெண் ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், இருவரது தரப்பு வாதங்களையும் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in