LATEST NEWS
“அதிகாரத்தின் அத்துமீறலா..?” திமுக MLA மீது அதிரடி வழக்குப்பதிவு..! பெண் அதிகாரி கொடுத்த புகாரால் பரபரப்பு..!!
ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலராகப் பணியாற்றி வரும் பெண் அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது மற்றும் பெண்ணின் மாண்புக்குப் பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
