LATEST NEWS
“இது என்னப்பா அதிசயம்..!” தாயை இழந்து தவித்த பூனைக்குட்டி.. நாய் செய்த நெகிழ்ச்சி காரியத்தை பாருங்க.. நெட்டிசன்களை உருக வைத்த வீடியோ..!!
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள நின்னியூர் கிராமத்தில், பூனைக்குட்டயின் தாய் இறந்து போனது. இணையடுத்து நாய் ஒன்று தன் சொந்தக் குட்டி போலப் பாசத்துடன் பூனைக்கு பாலூட்டி அரவணைத்து வரும் ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக நாய்களும் பூனைகளும் எதிரெதிர் துருவங்களாகப் பார்க்கப்படும் நிலையில், அரியலூரில் இந்த இரு உயிரினங்களுக்கும் இடையே பாசப் பிணைப்பு ஏற்பட்டுள்ளது. பசியால் தவித்துக்கொண்டிருந்த பூனைக்குட்டியின் நிலையைப் பார்த்த அந்த நாய், எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அதற்குப் பால் கொடுத்துத் தனது தாய்மையைப் பறைசாற்றியுள்ளது.
விலங்குகளுக்குள் இருக்கும் இந்தத் தூய்மையான அன்பும், இனம் கடந்த பாசமும் மனிதர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக மாறியுள்ளது. இயற்கையின் விதிகளையும் தாண்டி, தாயில்லாப் பிள்ளைக்கு அடைக்கலம் தந்த அந்த நாயின் நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
