BREAKING: “காங்கிரஸ் முயற்சி தோல்வி” தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுக அதிரடி முடிவு – மு.க. ஸ்டாலின் திட்டவட்டம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: “காங்கிரஸ் முயற்சி தோல்வி” தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுக அதிரடி முடிவு – மு.க. ஸ்டாலின் திட்டவட்டம்..!!!

Published

on

சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில், இந்தியா கூட்டணித் தலைவர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், வழக்கறிஞர் கபில் சிபல், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம். பேபி, மம்தா பானர்ஜி மற்றும் கர்நாடகா, தெலங்கானா, கேரள மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாளை கூடவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதற்கு திமுக ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தது. இந்த ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் முன்வைத்த கோரிக்கையை திமுக நிராகரித்துள்ளது.

Advertisement

பேச்சுவார்த்தை முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். இதன் மூலம், திமுகவின் நிலைப்பாட்டை மாற்ற காங்கிரஸ் எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in