CRIME
“SBI வங்கி லாக்கருக்கே பாதுகாப்பில்லையா..?” 275 கிராம் தங்க நகைகள் மாயம்.. அமெரிக்காவிலிருந்து திரும்பிய பெண் மருத்துவருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. பகீர் பின்னணி..!!
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள மாசாப் டேங்க் எஸ்பிஐ வங்கிக் கிளையின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 275 கிராம் தங்க நகைகள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் பெண் மருத்துவர் ஒருவருக்குச் சொந்தமான வங்கி லாக்கரிலிருந்தே இந்தத் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. தனது தந்தையின் பராமரிப்பாளராக வேலை பார்த்து வந்த பொஜ்ஜா சிரஞ்சீவி என்பவர் மீதே அந்தப் பெண் மருத்துவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 30-ஆம் தேதி, தனது தந்தையுடன் சேர்ந்து வங்கிக்குச் சென்ற பராமரிப்பாளர் சிரஞ்சீவி, அந்த வங்கி லாக்கரைத் திறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து திரும்பிய பெண் மருத்துவர் வங்கி லாக்கரைச் சோதனையிட்டபோது, அதிலிருந்த 275 கிராம் தங்க நகைகள் மாயமாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது தந்தையின் வயது மற்றும் உடல்நிலையைப் பயன்படுத்திப் பராமரிப்பாளர் சிரஞ்சீவியே இந்த நகைகளைத் திருடியிருக்கலாம் என அவர் சந்தேகிக்கிறார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்துள்ளார். மருத்துவரின் புகாரின் பேரில் பராமரிப்பாளர் பொஜ்ஜா சிரஞ்சீவி மீது வழக்குப் பதிவு செய்துள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல்துறையினர், வங்கியின் சிசிடிவி காட்சிகள் மற்றும் லாக்கர் ஆவணங்களைக் கைப்பற்றித் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
