“மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட புது யுக்தி”… ஆந்திராவிலிருந்து கன்டெய்னரில் கடத்தி வரப்பட்ட மணல் பறிமுதல்… ஓட்டுநர்களுக்கு வலைவீச்சு…!! – cinefeeds
Connect with us

CRIME

“மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட புது யுக்தி”… ஆந்திராவிலிருந்து கன்டெய்னரில் கடத்தி வரப்பட்ட மணல் பறிமுதல்… ஓட்டுநர்களுக்கு வலைவீச்சு…!!

Published

on

ஆந்திர மாநிலத்திலிருந்து கண்டெய்னர் லாரிகள் மூலமாகத் தமிழகத்திற்குள் கள்ளத்தனமாக மணல் கடத்தி வரப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை சிறப்புப் பறக்கும் படை அதிகாரி சீனிவாச ராவ் இரவு நேரத்தில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார். கும்மிடிப்பூண்டியைத் தாண்டி கவரைப்பேட்டை நோக்கி வந்த ஒரு கண்டெய்னர் லாரியை அதிகாரிகள் வழிமறித்தபோது, ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டுத் தப்பியோடினார். அந்த லாரியைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று மேற்பகுதியைத் திறந்து சோதனையிட்டதில், உள்ளே முழுவதுமாக ஆந்திர மணல் கடத்தி வரப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

அடுத்தகட்டச் சோதனையில், கவரைப்பேட்டை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த மற்றொரு கண்டெய்னர் லாரியையும் அதிகாரிகள் மடக்கினர். அப்போதும் ஓட்டுநர் லாரியைப் பூட்டிவிட்டுச் சாவியுடன் தப்பியோடிய நிலையில், பூட்டு திறக்கப்பட்டு கவரைப்பேட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அந்த லாரியின் மேற்பகுதியைத் திறந்து பார்த்தபோது, அதிலும் கள்ளத்தனமாகக் கொண்டு வரப்பட்ட ஆந்திர மணல் நிரப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.

Advertisement

பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு கண்டெய்னர் லாரிகளும் கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தப்பியோடிய லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் குறித்துப் போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்; முதற்கட்ட ஆய்வறிக்கை சுரங்கத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in