CRIME
“சாமிக்கே பாதுகாப்பில்லையா..?” நள்ளிரவில் கதவை உடைத்து அம்மனின் திருமாங்கல்யத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்… ஷாக்கிங் வீடியோ..!!
வன்னிவேடு அகத்தீஸ்வரர் கோயிலில் இரும்புக் கம்பியால் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், அம்மனின் திருமாங்கல்யம் மற்றும் உண்டியலைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையன், கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியால் கோயில் கதவுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளான்.
கோயிலுக்குள் நுழைந்த அந்தத் திருடன், கருவறைக்குள் இருந்த அம்மன் சிலையின் கழுத்திலிருந்த புனிதமான திருமாங்கல்யத்தைத் திருடியதுடன், பக்தர்கள் காணிக்கை செலுத்தும் கோயில் உண்டியலையும் அங்கிருந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளான். மறுநாள் காலை வழக்கம் போல் வழிபாட்டிற்காகக் கோயிலைத் திறக்க வந்தவர்கள், கதவு உடைக்கப்பட்டு அம்மனின் திருமாங்கல்யமும் உண்டியலும் மாயமாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
புனிதமான கோயிலிலேயே அம்மனின் திருமாங்கல்யம் திருடப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதி பக்தர்களிடையே பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதுடன், கோயில் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி மர்ம நபரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
