CRIME
“தந்தையின் துப்பாக்கியால் பறிபோன மகன் உயிர்”.. அலமாரியில் பதிந்த குண்டுத் தடத்தால் வெடித்த கொ**ச் சந்தேகம்… உ.பி.யில் அதிர்ச்சிச் சம்பவம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம் நகிணா பகுதியைச் சேர்ந்த விவசாயத் தலைவர் குன்வர் ஹர்ஷவர்தன் சிங்கின் 22 வயது மகன் பிருத்விராஜ், வீட்டின் அறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். சனிக்கிழமை மாலை பெற்றோர் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த பிருத்விராஜை நண்பர் ஒருவர் வந்து பார்த்தபோது இந்தச் சம்பவம் தெரியவந்தது. அவரது மார்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்த நிலையில், அருகிலேயே தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியும் கிடந்துள்ளது.
அறையில் இருந்த அலமாரியிலும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த தடம் காணப்படுவதால், இச்சம்பவம் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிருத்விராஜ் நொய்டாவில் உள்ள கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன் பயின்று வந்ததாகவும், அவரது மூத்த சகோதரர் புருவும் நொய்டாவில் படித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கலாம் எனக் காவல்துறை கருதும் நிலையில், தனது உரிமம் பெற்ற துப்பாக்கியைக் கொண்டு யாரோ மகனைக் கொலை செய்துவிட்டதாகத் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். அறையில் தடயவியல் சோதனை நடத்திய காவல்துறையினர் துப்பாக்கியைப் பறிமுதல் செய்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் குடும்பத்தினரிடம் நடத்தப்படும் விசாரணை அடிப்படையில் தற்கொலையா அல்லது கொலையா எனத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
