LATEST NEWS
FLASH: தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுகவின் இறுதி முடிவு என்ன..? இண்டியா கூட்டணி சந்திப்புக்கு பின் ஸ்டாலின் பரபரப்பு பேட்டி..!!
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவகாரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், இந்த விவகாரம் குறித்த கட்சியின் தெளிவான பார்வையை முன்வைத்தார்.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதா ஒருவேளை தோற்கடிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்கான தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறையக்கூடும் என்ற அபாயம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே, இந்த மசோதா தொடர்பான திமுகவின் நிலைப்பாட்டைத் தான் சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துரைத்ததாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
மேலும், தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த முக்கியக் கோரிக்கைகள் அனைத்தும், தற்போதைய புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளதாக மு.க. ஸ்டாலின் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே, தமிழ்நாட்டின் நலன் கருதி திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
