LATEST NEWS
“வரட்டும்.. வந்து பார்க்கட்டும்” ஸ்டாலினை சந்திக்க வரும் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்… உதயநிதி ஸ்டாலின் கொடுத்த கூல் ரியாக்ஷன்..!!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்க இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்கள் இன்று சென்னை வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். கூட்டணித் தலைவர்களின் வருகை குறித்துப் பேசிய அவர், “வரட்டும்.. வந்து பார்க்கட்டும்.. தலைவர் முடிவு எடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்த உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று திட்டவட்டமாகக் கூறினார். மாநில நலன் சார்ந்த விஷயங்களில் கட்சி எப்போதும் உறுதியாக இருக்கும் என்பதை அவர் இதன் மூலம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், தொகுதி மறுவரையறை தொடர்பான ஆபத்துகள் மற்றும் உரிமைகள் குறித்து நாட்டிலேயே முதன்முதலில் குரல் கொடுத்தது திமுகதான் என்றும் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சென்னை வரும் சூழலில், உதயநிதி ஸ்டாலினின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
