LATEST NEWS
“தற்கொ**க்கு முன் பெண் என்ஜினீயர் எடுத்த அதிரடி முடிவு”… சொத்துகளை ஆதரவற்றோருக்கு எழுதிவைத்ததில் மர்மம்… பின்னணி என்ன?…
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மியாபூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த 36 வயது பெண் மென்பொருள் பொறியாளர் சிந்துஜா, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்த இவருக்கு, கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், குடும்பத் தகராறு காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றுத் தனியாக வசித்து வந்துள்ளார்.
சிந்துஜா அலுவலகத்திற்குச் செல்லாததாலும், அவரது செல்போனுக்குத் தொடர்பு கொண்டபோது எந்தப் பதிலும் கிடைக்காததாலும் சந்தேகமடைந்த அவரது நண்பர் ராஜ்ரெட்டி, அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு வீட்டிலிருந்த மின்விசிறியில் சிந்துஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிந்துஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அங்கிருந்த உருக்கமான கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்; அதில் தனது சொத்துகளை ஆதரவற்றோர் இல்லத்திடம் ஒப்படைத்து விடுமாறு சிந்துஜா குறிப்பிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
