“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்”… 100% மானியத்தில் இலவச கறவை மாடு, 5 ஆடுகள் … விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்”… 100% மானியத்தில் இலவச கறவை மாடு, 5 ஆடுகள் … விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு…!!

Published

on

ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை உயர்த்தவும் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 100 சதவீத மானியத்தில் இலவச கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் கறவை மாடு திட்டத்தின் கீழ் ரூ.50,000 மதிப்புள்ள கறவை மாடு, 2 ஆண்டு காப்பீடு மற்றும் போக்குவரத்து-தீவனச் செலவிற்கு ரூ.3,000 வழங்கப்படுகிறது; அதேபோல் ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின்’ கீழ் ரூ.30,000 மதிப்புள்ள 5 செம்மறி/வெள்ளாடுகள், 2 ஆண்டு காப்பீடு, ரூ.2,500 போக்குவரத்து-தீவனத் தொகை மற்றும் ஓராண்டுக்குப் பின் சிறப்பாகப் பராமரிப்போருக்கு ரூ.2,000 ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.

18 முதல் 60 வயதிற்குட்பட்ட மகளிர் மற்றும் திருநர்கள் இத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்; ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மகளிர் அல்லது மாற்றுத்திறன் கொண்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், முந்தைய ஆண்டுகளில் இதேபோன்ற கால்நடைத் திட்டங்களில் பயனடைந்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட நிலம்/கால்நடை வரம்புகளை மீறுவோர் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர்.

Advertisement

சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாக இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. தகுதியானவர்கள் டிசம்பர் 17, 2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்; இணையதளம் வழியே விண்ணப்பிக்க இயலாதவர்கள் அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in