LATEST NEWS
“எங்க டெஸ்ட்ல நல்லாதான் இருந்துச்சு” பிஸ்லெரி தண்ணீர் பாட்டிலில் பாக்டீரியா.. பீதியில் மக்கள்… நிறுவனம் கொடுத்த அதிர்ச்சிப் பதில்..!!
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள டெலிபாரா கிராம ஆலையில் தயாரிக்கப்பட்ட பாட்டில் குடிநீர் மாதிரிகளில் கோலிபார்ம் பாக்டீரியா இருப்பதாக FSSAI நடத்திய சோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 12 அன்று பிஸ்லெரி நிறுவனத்திற்கு அறிவிப்பு அனுப்பிய FSSAI, ஜூலை மாதம் தயாரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட தொகுப்பின் விற்பனையைத் தடை செய்ய உத்தரவிட்டது.
FSSAI சோதனையில் பாக்டீரியா கண்டறியப்பட்டதை ஏற்றுக்கொண்ட பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனம், அந்தத் தொகுப்பைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இருப்பினும், அதே தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் தாங்கள் நடத்திய சுயாதீன சோதனைகளில் உணவுப் பாதுகாப்புத் தர விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
முன்னதாக, கோவாவில் உள்ள பிஸ்லெரி ஆலை மாதிரியில் புற்றுநோயை உண்டாக்கும் பாலிநியூக்ளியர் அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள் கண்டறியப்பட்டதை அடுத்து அது பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்ட சில நாட்களிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பாட்டில் குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்த FSSAI விரிவான ஆய்வு நடத்தி வரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
