LATEST NEWS
அமைச்சர் ரமேஷ் பதவி பறிப்பு..? எங்கே ஒளிந்துகொண்டார்..? – திருப்பரங்குன்றம் விவகாரத்தால் வெடித்த பெரும் புயல்… அதிர்ச்சியில் விஜய்..!!
மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்றும் விவகாரத்தில் மாநில உரிமையை நிலைநாட்டத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி, அமைச்சர் ரமேஷின் பதவியைப் பறிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இணையவாசிகள் பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அதிமுகவினர் அமைச்சர் ரமேஷின் புகைப்படத்தைப் பதிவிட்டு அவரைக் ‘காணவில்லை’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த நூதனப் பிரச்சாரம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.
வழக்கமாக அனைத்து விவகாரங்கள் குறித்தும் ஊடகங்கள் முன்பு உடனுக்குடன் கருத்துத் தெரிவிக்கத் தயாராக இருக்கும் அமைச்சர் ரமேஷ், திருப்பரங்குன்றம் விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்த பிறகு எங்கு சென்று ஒளிந்து கொண்டார் என அந்தப் பதிவுகளில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
