“மரண தண்டனை விதித்தும் உயிர் பிழைக்க வாய்ப்பு”.. ரூ.818 கோடி ஊழல் வழக்கில் சீன நீதிமன்றம் வைத்த அதிரடி ‘செக்’…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மரண தண்டனை விதித்தும் உயிர் பிழைக்க வாய்ப்பு”.. ரூ.818 கோடி ஊழல் வழக்கில் சீன நீதிமன்றம் வைத்த அதிரடி ‘செக்’…!!

Published

on

சீன அரசியல்வாதியான லான் தியான்லி 2008 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சுமார் ரூ.818 கோடி ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். சீனாவின் ஹுனான் மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பின்படி அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும், அரசியலில் ஈடுபட அவருக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இரண்டு ஆண்டு சிறைவாசக் காலத்தில் அவரது நன்னடத்தை கண்காணிக்கப்படும் என்றும், அக்காலத்தில் அவரது நடத்தை சிறப்பாக இருந்தால் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு பரோலில் வர முடியாத ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையின் கீழ் அரசாங்கத் துறைகளில் நிலவும் லஞ்சம் மற்றும் ஊழல்களை ஒழிக்கவும், தப்பி ஓடிய குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோதச் சொத்துக்களை மீட்கவும் 2015-ஆம் ஆண்டு ‘ஆபரேஷன் ஸ்கை நெட்’ உள்ளிட்ட ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in