“இட்லி தட்டில் சிக்கிய 7 வயது சிறுமியின் விரல்”… 3 மணி நேர திக்… திக்… போராட்டத்திற்குப் பிறகு லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

“இட்லி தட்டில் சிக்கிய 7 வயது சிறுமியின் விரல்”… 3 மணி நேர திக்… திக்… போராட்டத்திற்குப் பிறகு லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

Published

on

வேலூர் கஸ்பா வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கருணாகரனின் 7 வயது மகள் மெர்சி (2-ம் வகுப்பு படிப்பவர்), வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது இட்லி தட்டில் வலது கை சுண்டு விரலை விட்டுள்ளார். எதிர்பாராத விதமாக விரல் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில், அவரும் அவரது பெற்றோரும் நீண்ட நேரம் முயன்றும் விரலை வெளியே எடுக்க முடியவில்லை.

இதையடுத்து சிறுமியைப் பெற்றோர் வேலூர் பென்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எடுத்த முயற்சியும் பலனளிக்காததால், வேலூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய சிறப்பு அலுவலர் கார்ல் மார்க்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தங்களது கருவிகள் மூலம் இட்லி தட்டைக் கவனமாக வெட்டி அகற்றி சிறுமியின் விரலைப் பத்திரமாக மீட்டனர்.

Advertisement

சுமார் 3 மணி நேரத் தொடர் போராட்டத்திற்குப் பிறகு விரல் மீட்கப்பட்டதால், அதில் வீக்கமும் லேசான காயமும் ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து சிறுமியை ஆசுவாசப்படுத்தினர்; இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in