அய்யோ கொடுமையே…! நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.. மேற்கூரையை உடைத்து பார்த்த மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… 2 பிஞ்சு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

அய்யோ கொடுமையே…! நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.. மேற்கூரையை உடைத்து பார்த்த மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… 2 பிஞ்சு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

Published

on

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடக்குசத்திரம் கிராமத்தில், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய் தனது இரு குழந்தைகளுடன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்குசத்திரம் மேற்கு தெருவைச் சேர்ந்த பெயிண்டரான காளிப்பாண்டி (32) என்பவருக்கும், மாரியம்மாள் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கபினேஸ்வரன் (5), ரபினேஸ்வரன் (4) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். மதுப்பழக்கம் கொண்ட காளிப்பாண்டி அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த அக். 5-ம் தேதி இரவு ஊர் காளியம்மன் கோயில் கொடை விழாவில் முளைப்பாரி கும்மி பாட்டு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மாரியம்மாளிடம், மதுபோதையில் வந்த காளிப்பாண்டி தகராறு செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாரியம்மாள், இரண்டு குழந்தைகளுடன் வீட்டிற்குத் திரும்பி, வீட்டில் இருந்த பெட்ரோலை குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்து தானும் தற்கொலை செய்துகொண்டார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் மேற்கூரையை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு மாரியம்மாள் உயிரிழந்து கிடந்த நிலையில், பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இரு குழந்தைகளையும் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைகள் இருவரும் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

முதல் வகுப்பு படித்து வந்த கபினேஸ்வரன், அங்கன்வாடியில் படித்து வந்த ரபினேஸ்வரன் மற்றும் தாய் மாரியம்மாள் ஆகியோரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகிரி காவல் ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின், உதவி ஆய்வாளர் சோலையப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரு சிறு குழந்தைகளும் பலியான இந்தத் துயரச் சம்பவம் வடக்குசத்திரம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in