சொல்ல சொல்ல கேட்க மாட்டியா..? செல்போன் தகராறில் மனைவியை இறைச்சி கத்தியால் துடிதுடிக்க வெட்டிக்கொன்ற கணவன்.. சென்னையில் பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

சொல்ல சொல்ல கேட்க மாட்டியா..? செல்போன் தகராறில் மனைவியை இறைச்சி கத்தியால் துடிதுடிக்க வெட்டிக்கொன்ற கணவன்.. சென்னையில் பயங்கரம்..!!

Published

on

சென்னை மாங்காடு அருகே தனது ஆண் நண்பருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசியதாக ஏற்பட்ட தகராறில், மனைவி சோபியாவை (26) இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டிக் கொலை செய்த கணவன் முஜைதீனை (30) காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட சோபியாவிற்கும் முஜைதீனுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு தற்போது 7 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், சோபியா தனது ஆண் நண்பருடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. மனைவியின் இந்த செல்போன் பயன்பாட்டை முஜைதீன் பலமுறை கண்டித்தும் அவர் கேட்காததால், இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisement

சம்பவத்தன்று ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த முஜைதீன் வீட்டில் இருந்த இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து சோபியாவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த முஜைதீனை தீவிரமாகத் தேடி வந்த மாங்காடு போலீசார், தற்போது அவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in