“வேற லெவல்..” வெளிநாடுகளை மிஞ்சும் சென்னை… 12 மாடி கட்டிடத்தின் நடுவ வழியா பறக்கும் மெட்ரோ ரயில்… ரூ. 446 கோடியில் செம திட்டம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வேற லெவல்..” வெளிநாடுகளை மிஞ்சும் சென்னை… 12 மாடி கட்டிடத்தின் நடுவ வழியா பறக்கும் மெட்ரோ ரயில்… ரூ. 446 கோடியில் செம திட்டம்..!!

Published

on

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், வெளிநாடுகளில் உள்ளதைப் போன்ற அதிநவீன முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணியின் ஒரு பகுதியாக, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் திருமங்கலம் பகுதியில் புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுமார் 3.85 ஏக்கர் பரப்பளவில், 12 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம் வழியாக மெட்ரோ ரயில்கள் நேரடியாகச் செல்லும் வகையில் இந்தத் திட்டம் அமைகிறது.

இத்திட்டத்தின்படி திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் நான்கு கோபுரங்களுடன் கூடிய வணிக வளாகமாகச் சுமார் 6.85 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இக்கட்டிடத்தின் 4 முதல் 6-வது தளங்களுக்கு இடைப்பட்ட உயரத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் நேரடியாகக் கடந்து செல்லவுள்ளன. மேலும், இந்தக் கட்டிடத்திற்குள்ளேயே மெட்ரோ ரயில் நிலையம், கார்ப்பரேட் அலுவலகங்கள், வணிகக் கடைகள் மற்றும் மூன்று அடுக்கு நிலத்தடி வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

Advertisement

புதிதாக அமைக்கப்பட உள்ள இந்த உயர்மட்ட மெட்ரோ நிலையமானது, ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திருமங்கலம் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையத்துடன் நடைமேம்பாலம் மூலம் இணைக்கப்படும். சுமார் ரூ. 446.88 கோடி மதிப்பீட்டில் இக்கட்டிடத்தைக் கட்டும் ஒப்பந்தத்தைக் கெப்பாசிட்டி இன்ஃப்ராப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் வென்றுள்ளது. மேலும், இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 24 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in