LATEST NEWS
சென்னையில் அதிர்ச்சி..! மாநகராட்சி ஊழியர்கள் போல நடித்து மர்ம நபர்கள் தெளித்த கொசு மருந்து.. 3 பெண்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்..!!
சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் எனக் கூறிக்கொண்டு அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் வீடுகளுக்குச் சென்று கொசு மருந்து தெளித்துள்ளனர். பொதுமக்களை ஏமாற்றி அவர்கள் தெளித்த அந்த மர்ம திரவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மருந்தின் நெடியால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் உடனடியாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல், அப்பகுதியைச் சேர்ந்த சுமதி மற்றும் சுமித்ரா ஆகிய மேலும் இரண்டு பெண்களுக்கும் மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அப்பகுதியில் கொசு மருந்து தெளிப்பதற்காக மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் யாரும் அனுப்பப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, போலி ஊழியர்களாக வந்து விஷவாயு போன்ற மருந்தைத் தெளித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
