LATEST NEWS
“CM விஜய்யின் நடவடிக்கை பத்தாது..” இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்… மேகதாது விவகாரத்தில் திருமா அதிருப்தி..!!
மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடகா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், நாமும் தீவிரம் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேசமயம் தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் நடுவே அணை கட்ட இயலாது என்றும், இருந்தாலும் தமிழ்நாடு அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
