“ச்சீ.. நெனச்சாலே கொமட்டுது..” குடும்பத்துடன் சாப்பிடப் போன இடத்தில் நடந்த பகீர் சம்பவம்… தோசை சட்னியில் கிடந்த கரப்பான் பூச்சி… வீடியோ வைரலானதும் கடையை மூடிய அதிகாரிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ச்சீ.. நெனச்சாலே கொமட்டுது..” குடும்பத்துடன் சாப்பிடப் போன இடத்தில் நடந்த பகீர் சம்பவம்… தோசை சட்னியில் கிடந்த கரப்பான் பூச்சி… வீடியோ வைரலானதும் கடையை மூடிய அதிகாரிகள்..!!

Published

on

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள பிரபல ‘பஜ்ரங் தோசை’ உணவகத்தில் பரிமாறப்பட்ட தோசை சட்னியில் கரப்பான் பூச்சி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, உணவுத் துறை அதிகாரிகள் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். டாக்டர் பாவேஷ் வியாஸ் என்ற வாடிக்கையாளர் தனது குடும்பத்தினருடன் உணவருந்திக் கொண்டிருக்கும்போது இந்த அதிர்ச்சியை எதிர்கொண்டதுடன், கடைக்காரரின் முறையற்ற நடத்தையையும் கண்டித்து தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

உணவுத் துறை அதிகாரிகள் பஜ்ரங் தோசை கடைக்குச் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டனர். FSSAI விதிமுறைகளின்படி கடையில் முறையான சுகாதாரம் பராமரிக்கப்படவில்லை என்று உணவு பாதுகாப்பு அதிகாரி நீலேஷ் ஜசோலியா தெரிவித்தார். இதனால், அந்த உணவகம் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக உத்தரவிடப்பட்டதுடன், முழுமையான தூய்மைப் பணிகள், பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கடுமையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

Advertisement

இச்சம்பவத்திற்குப் பிறகு, ஜாம்நகர் நகரில் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்த கடுமையான கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. பட்டேல் காலனியில் அமைந்துள்ள இந்த புகழ்பெற்ற உணவகத்தில் நடந்த இந்தத் தவறு காரணமாக, மூன்று நாட்களுக்கு அனைத்து விற்பனைகளும் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. வெளி உணவுகளை விரும்பி உண்ணும் பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பொறுத்தவரை இதுபோன்ற சம்பவங்கள் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in