CRIME
அய்யோ கொடுமையே..! ரூ.30,000 திரும்பத் தராததால் ஆத்திரம்.. சக ஊழியரைக் கொன்று தலைத் தனியா உடல் தனியா வீசிய நண்பன்..! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
குஜராத்தின் சூரத் நகரில், ஒடிசாவைச் சேர்ந்த சச்சித் குமார் நரேந்திர பால் என்பவர், தான் பணிபுரிந்த விசைத்தறி நிறுவனத்தில் கூட வேலை பார்த்த நபரிடம் வழங்கிய 30,000 ரூபாய் கடனைத் திரும்பப் பெற முடியாததால் ஏற்பட்ட தகராறில், அவரது தலையைத் துண்டித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் உடலை மயானத்திலும், வெட்டப்பட்ட தலையை சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்காபுரி ரயில்வே பாலத்தின் கீழ் தண்டவாள அருகிலும் வீசி எறிந்துள்ளார்.
கோட்லவாடி சந்திப்புக்கு அருகிலுள்ள மயானத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் நிர்வாண சடலம் கிடப்பதாக நவம்பர் 3 ஆம் தேதி காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சந்தேக நபரான சச்சித் குமார் நரேந்திர பாலைக் கைது செய்தபோது, அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த தகவலின் பேரிலேயே தண்டவாளத்திற்கு அருகில் வீசப்பட்டிருந்த துண்டிக்கப்பட்ட தலை காவல்துறையினரால் மீட்கப்பட்டது.
காவல்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி இந்தக் கொலை சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. தற்போது சடலமும் துண்டிக்கப்பட்ட தலையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
