CRIME
“அந்த ஒற்றைச் சந்தேகம்..” மனைவியை உயிரோடு தீயிட்டு கொளுத்திய கொடூர கணவன்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தின் சிப்ராமாவ் காவல் எல்லைக்குட்பட்ட ஜகத்பூர் கிராமத்தில், சந்தேகப் புத்தியால் கணவனே தன் மனைவியை உயிரோடு தீயிட்டு கொளுத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் சோனம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சோனம் வேறொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக அவளது கணவர் சுக்பீர் சிங் என்கிற மோனு தொடர்ந்து சந்தேகித்து வந்துள்ளார். இந்த சந்தேகத்தின் உச்சக்கட்டமாக, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மோனு சோனம் மீது தீ வைத்துள்ளார்.
இந்தக் கொடூரக் கொலையைச் செய்த பிறகு, குற்றவாளியான சுக்பீர் சிங் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிப்ராமாவ் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சோனமின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள கொடூரக் கணவன் மோனுவைப் பிடிப்பதற்காகப் போலீசார் தனிப்படைகள் அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
