CRIME
“டிண்டர் ஆப் காதல் வலை..” ஒரே ஒரு சந்திப்பில் ரூ.26,000 பில் போட்டு காதலனை அலறவிட்ட பெண்… அதிர்ச்சி பின்னணி..!!
புதுடெல்லியில் ஜைத் அகமது என்ற இளைஞர், டிண்டர் செயலி மூலம் பழகிய சான்யா என்கிற நிகிதா என்ற பெண்ணின் காதல் வலையில் வீழ்த்தப்பட்டு, கஃபே பில் மோசடிக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பெண் ஜைதை ஜிடிபி நகர் மெட்ரோ நிலையம் அருகே நேரில் சந்திக்க வைத்துள்ளார். பின்னர், அவரை ஹட்சன் லேனில் உள்ள ‘பிளாக் பாந்தர் கஃபே’ என்ற உணவகத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு திட்டமிட்டு சுமார் ரூ.26,000 மதிப்பிற்குப் பிரம்மாண்டமாகப் பில் போட்டுள்ளார்.
இந்த பில் தொகையைச் செலுத்த ஜைத் மறுத்தபோது, கஃபே உரிமையாளர் ஜாவேத், அனுஜ் குமார் மற்றும் அங்குமிருந்த மேலும் 3-4 நபர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு மிரட்டிப் பணம் கேட்டுள்ளனர். அவர்கள் ஜைதின் தந்தையை ஆன்லைன் மூலமாகப் பணத்தை மாற்றச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். அதன்படி நவீன் ராஜ்புத் என்ற பெயரில் இருந்த க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தப்பட்ட பிறகே, அந்த இளைஞரை அவர்கள் கஃபேயில் இருந்து வெளியேற அனுமதித்துள்ளனர். இச்சம்பவத்திற்குப் பிறகு சான்யா என்கிற நிகிதா தனது மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டார். டிண்டர் டேட்டிங் ஆப் மூலம் இளைஞரை வரவழைத்து மிரட்டிப் பணம் பறித்த இந்தச் சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
