LATEST NEWS
“என்னை மன்னிச்சிடுங்க.. தப்பு பண்ணிட்டேன்” வாகனத்திற்குத் தீ வைத்த இளைஞருக்கு போலீசார் கொடுத்த அதிரடி ட்ரீட்மென்ட்..!!!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சிறிய தகராறு காரணமாக வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குத் தீ வைத்த இளைஞர், போலீசாரின் அதிரடி நடவடிக்கைக்குப் பிறகு இரு கைகளையும் கூப்பி “என்னை மன்னித்து விடுங்கள்” எனக் கதறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலி ஜாவா என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த இளைஞர், ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்திற்குப் பழிவாங்கும் விதமாக வீட்டின் முன்பு நின்றிருந்த வாகனத்திற்குத் தீ வைத்துள்ளார்.
இந்தத் தீவைப்புச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவான நிலையில், அதனை ஆதாரமாகக் கொண்டு போலீசார் தலைமறைவாக இருந்த பாலி ஜாவாவைத் தீவிரமாகத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். இதையடுத்து, குற்றவாளிகளுக்குப் பாடம் புகட்டும் வகையில் போலீசார் அவரைத் தெருத்தெருவாக அழைத்துச் சென்றபோது, தனது தவறை உணர்ந்து அவர் கைகூப்பி மன்னிப்பு கேட்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
