“மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது” “உச்ச நீதிமன்றமே சொல்லிடுச்சி.. பிரதமர் மோடியை மேடையிலேயே அலறவிட்ட டி.கே. சிவகுமார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது” “உச்ச நீதிமன்றமே சொல்லிடுச்சி.. பிரதமர் மோடியை மேடையிலேயே அலறவிட்ட டி.கே. சிவகுமார்..!!

Published

on

மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார். மைசூருவில் நடைபெற்ற அரசு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மேடையில் அமர்ந்திருந்தபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துப் பேசினார். அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட சிவகுமார், பெங்களூருவின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய இத்திட்டம் அவசியமானது எனத் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 177 டி.எம்.சி காவிரி நீரைத் தடையின்றித் திறந்து விட கர்நாடகா தயாராக இருப்பதாகவும், இந்த அணையால் தமிழ்நாட்டிற்கும் பலன் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

Advertisement

எனவே, மேகதாது அணை கட்டுவதற்கான இறுதி அனுமதியை ஒன்றிய அரசு விரைவில் வழங்கும் எனத் தாம் முழுமையாக நம்புவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், இந்த அணைத் திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், இரு மாநிலங்களுக்கு இடையே மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in