“உள்ளே போகக்கூடாது..” 3 தலித் அமைச்சர்களுக்கு நேர்ந்த அவமானம்..! கொந்தளித்த டி.கே. சிவகுமார் எடுத்த அதிரடி நடவடிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உள்ளே போகக்கூடாது..” 3 தலித் அமைச்சர்களுக்கு நேர்ந்த அவமானம்..! கொந்தளித்த டி.கே. சிவகுமார் எடுத்த அதிரடி நடவடிக்கை..!!

Published

on

கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா கொண்டாட்டங்களின் போது நடைபெற்ற பூஜையில் மூன்று தலித் அமைச்சர்களை காவல்துறை அதிகாரி தடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த அக்டோபர் 21 அன்று, ஜம்பு சவாரி காட்டில் கோட்டே ஆஞ்சநேய சுவாமி கோயிலில் தசரா பூஜை நடைபெற்றுள்ளது. குறிப்பாக அங்கு நடைபெற்ற பாரம்பரிய நந்தி துவஜ பூஜை நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த அமைச்சர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.

அங்கு நடைபெற்ற பூஜையில் பங்கேற்க முதலமைச்சர் டி.கே. சிவகுமாரும், மைசூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் யதீந்திர சித்தராமையாவும் வருகை தந்துள்ளனர். அவர்களுடன் தலித் சமூகத்தைச் சேர்ந்த கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சிவராஜ் தங்கடகி, வேளாண்மை அமைச்சர் பி.எம். நரேந்திர சுவாமி மற்றும் முஸ்ராய் அமைச்சர் கே.எஸ். பசவராஜு ஆகியோரும் பூஜை மண்டபத்திற்குள் நுழைய முயன்றனர். ஆனால், முதலமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்ற 3 அமைச்சர்களையும் மைசூர் காவல் கண்காணிப்பாளர் சி.பி. ரிஷ்யந்த் அவர்களின் வழியை மறித்து தடுத்து நிறுத்தினார்.

Advertisement

இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, முதலமைச்சர் டி.கே. சிவகுமார் நேரடியாகத் தலையிட்டு அமைச்சர்களை பூஜையில் பங்கேற்க அனுமதிக்குமாறு அறிவுறுத்தினார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜனீஷ்க்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in