LATEST NEWS
அச்சச்சோ..! சமோசா விற்ற கஷ்டம் வீணாப் போச்சு… வந்தே பாரத் ரயிலில் நடந்த சோகம்.. வைரலாகும் நெஞ்சை கலங்க வைக்கும் வீடியோ..!!
கர்நாடக மாநிலம் குந்தக்கல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ரயிலில் சமோசா விற்கும் வியாபாரி ஒருவர், சில விநாடி தாமதத்தால் தனது உழைப்பின் பலனை இழந்து தவித்ததை காட்டும் வீடியோ பலரது கண்களையும் குளமாக்கியுள்ளது.
எஸ்.எம்.வி.டி பெங்களூரிலிருந்து கல்பூர்கி நோக்கிச் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் குந்தக்கல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது ரயிலில் பயணம் செய்த பயணியொருவர் நடைமேடையில் இருந்த வியாபாரியிடம் சமோசா வாங்கியுள்ளார். ரயில் புறப்படத் தயாரான நிலையில், பயணி மேலும் சில சமோசைகளைக் கேட்டதால், வியாபாரியும் அவரது உதவியாளரும் உடனடியாகச் சமோசைகளை வழங்கினர். ரயிலின் தானியங்கி கதவுகள் மூடப்படத் தொடங்கியபோது, பயனிக்கு உணவு கிடைப்பதற்காக வியாபாரி தனது கையால் கதவைத் தடுத்து நிறுத்தினார்.
https://www.instagram.com/reel/Dfd5ypfJvfY/?utm_source=ig_web_button_share_sheet
பயணிக்குச் சமோசைகளைக் கொடுத்த பிறகு, பணம் பெறுவதற்காகத் தனது யுபிஐ ஸ்கேனரை எடுக்க வியாபாரி சில அடிகள் பின்னோக்கிச் சென்றார். அதற்குள் ரயிலின் கதவுகள் தானாக மூடப்பட்டு ரயில் புறப்படத் தொடங்கியது. ஸ்கேனருடன் வியாபாரி திரும்பி வந்தபோது ரயில் ஏற்கனவே கிளம்பிச் சென்றுவிட்டது. தன் உழைப்புக்கான பணத்தை வாங்க முடியாமல், ஏமாற்றத்துடன் ரயிலைப் பார்த்தபடியே அவர் தனது தலையில் கைவைக்கும் காட்சி பார்ப்போரை வருத்தமடையச் செய்கிறது. முஸ்தாக் அகமது என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்துள்ளதுடன், தானியங்கி கதவுகள் கொண்ட வந்தே பாரத் போன்ற ரயில்களில் கடைசி நேரத்தில் அவசரமாகப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
