CRIME
“சமையலறையில் வெடித்த வாக்குவாதம்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த கணவன்… அழுதுகொண்டே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற மனைவியின் பகீர் பின்னணி..!!
குஜராத் மாநிலம் அகமதாபாத் நரோடா பகுதியில், தனக்கு பிடித்த காய்கறி உணவை சமைக்காதது தொடர்பாக தம்பதியரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் உச்சகட்டமாக, ஆத்திரமடைந்த மனைவி நிர்மலா, சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து தனது கணவரான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் திலீப்பாய் சோமாஜி கராடியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
கணவரைத் தாக்கிய பின்னர், நிர்மலாவே தனது கணவரை மீட்டு சிகிச்சைக்காக அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். எனினும், திலீப்பை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். உணவிற்காக ஏற்பட்ட சிறிய தகராறில், மனைவியே கணவனைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
