“அம்மா எழுந்துருமா..” விடிய விடிய சடலத்தின் அருகே அழுதுகொண்டே இருந்த 3 வயது குழந்தை.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மா எழுந்துருமா..” விடிய விடிய சடலத்தின் அருகே அழுதுகொண்டே இருந்த 3 வயது குழந்தை.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

Published

on

ஆந்திர மாநிலம் கர்னூலில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரை விட்டுப் பிரிந்து, 3 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த சுவாதி (30) என்ற திருமணமான பெண் தற்கொலை செய்து கொண்டார். தாய் இறந்துவிட்ட விபரம் தெரியாத அந்தப் பிஞ்சு குழந்தை, இரவு முழுவதும் தாயின் சடலத்திற்கு அருகிலிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு விடிய விடிய அழுதுகொண்டே இருந்துள்ளது.

மறுநாள் காலையிலும் சுவாதியின் வீட்டின் கதவுகள் நீண்ட நேரமாக மூடப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோதுதான் இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அங்கு அழுது அழுது மயக்க நிலையில் இருந்த குழந்தையை போலீசார் தட்டி எழுப்பி மீட்டனர். தனியாக வாழ்ந்து வந்த ஏக்கத்தில் ஏற்பட்ட விரக்தியால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக சுவாதியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in