CRIME
“என் பொண்ணு கூட பேசாத” எச்சரிக்கையை மீறி மகளுடன் கள்ளக்காதல்.. 34 வயது வாலிபரைக் கத்தியால் குத்தித் தீர்த்துக்கட்டிய தந்தை..!!
சென்னை பெரம்பூர் அருகே உள்ள செம்பியம் சக்கரபாணி தோட்டம் பகுதியில் 34 வயதான ரமேஷ் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மகளுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த காரணத்திற்காக, பெண்ணின் தந்தையான சக்கரபாணி இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனது மகளுடனான பழக்கத்தைக் கைவிடுமாறு சக்கரபாணி ஏற்கெனவே ரமேஷைப் பலமுறை எச்சரித்துள்ளார். இருப்பினும், அந்த எச்சரிக்கையை மீறி ரமேஷ் தொடர்ந்து பழகி வந்ததால் ஆத்திரமடைந்த சக்கரபாணி, அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த செம்பியம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தக் கொலை வழக்கு தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
