LATEST NEWS
அய்யயோ என்னா நடிப்பு சாமி.. சத்யபாமா அழுதது நாடகம்.. கனிமொழி எம்பி கடும் விமர்சனம்…!!
திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி கருணாநிதி, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தாராபுரத்தில் அண்மையில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் வேட்பாளர் சத்யபாமா உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் சிந்திய நிகழ்வை அவர் மேடையில் சுட்டிக்காட்டி சாடினார்.
பரப்புரையில் பேசிய கனிமொழி, தாராபுரம் தவெக கூட்டத்தில் வேட்பாளர் சத்யபாமா உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில், அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகக் குறிப்பிட்டார். உடனே அவர் மேடையில் இருந்த சத்யபாமாவிடம் சென்று ஏதோ ரகசியமாகக் கூற, அதைத் தொடர்ந்து சத்யபாமா திடீரென மேடையிலேயே அழத் தொடங்கியதாக விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், உடனடியாக அவருக்கு ஆறுதல் கூறியதாகத் தெரிவித்த கனிமொழி, இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மக்கள் மத்தியில் அனுதாபத்தைப் பெறுவதற்காக மேடையில் இப்படி நாடகம் நடத்துபவர் தான் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார் என்று அவர் சாடினார்.
