CRIME
“எங்கு ஓடினாலும் தப்பிக்க முடியாது..” பலே கொள்ளையனுக்கு AI மூலம் வலை வீசும் போலீஸ்.. தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் மாஸ்டர் பிளான்..!!
மதுரையில் உள்ள தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரத்தில், குற்றவாளியைப் பிடிக்கக் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, AI மூலமாக கொள்ளையனின் தோற்றத்தை உருவகப்படுத்தி, அவனை அடையாளம் காணும் தீவிர நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கொள்ளையன் தப்பிச் சென்றபோது அவன் பயன்படுத்திய பைக் எந்தெந்தப் பகுதிகள் வழியாகச் சென்றது என்பதை சிசிடிவி கேமராக்கள் பதிவுகள் மூலம் விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே, கொள்ளையன் வடமாநிலத்திற்குத் தப்பிச் சென்றிருக்கலாமா என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
