அச்சச்சோ..! சுவரில் இருந்த எர்த் பைப்பை தொட்ட 6-ஆம் வகுப்பு மாணவன்… நொடியில் பறிபோன உயிர்..! விளையாடப் போன மாணவனுக்கு நேர்ந்த சோகம்… கண்ணீரில் மூழ்கிய பெற்றோர்..!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

அச்சச்சோ..! சுவரில் இருந்த எர்த் பைப்பை தொட்ட 6-ஆம் வகுப்பு மாணவன்… நொடியில் பறிபோன உயிர்..! விளையாடப் போன மாணவனுக்கு நேர்ந்த சோகம்… கண்ணீரில் மூழ்கிய பெற்றோர்..!!

Published

on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் 9-வது தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் மணிகண்டன் (வயது 11). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மணிகண்டன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பக்கம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக, வீட்டின் முன் சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த எர்த் பைப்பை மணிகண்டன் தொட்டுள்ளார். அதில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கியதில் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

Advertisement

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும் அவரை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in