“புதரிலிருந்து வெளியே வந்த புலி”… பின்னாலேயே வந்த மற்றொரு புலி… நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளை அதிர வைத்த சுவாரசிய சம்பவம்…!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

“புதரிலிருந்து வெளியே வந்த புலி”… பின்னாலேயே வந்த மற்றொரு புலி… நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளை அதிர வைத்த சுவாரசிய சம்பவம்…!!

Published

on

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி – மாயார் சாலையில் வாகனங்களில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு அரிய காட்சி தென்பட்டது. சாலையோர அடர்ந்த புதரிலிருந்து வெளியே வந்த ஒரு புலி நிதானமாகச் சாலையைக் கடந்து சென்றது; அதனைத் தொடர்ந்து மற்றொரு புலியும் அதே வழியாகச் சாலையைக் கடந்து வனப்பகுதிக்குள் சென்றது.

இந்த அற்புதக் காட்சியைக் கண்ட சுற்றுலாப் பயணிகள், பாதுகாப்பான தொலைவில் வாகனங்களை நிறுத்தி, உள்ளே இருந்தபடியே தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தற்போது இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகின்றன.

Advertisement

கடந்த 22-ஆம் தேதியும் இதே மாயார் சாலையில் புலி ஒன்று கடந்து சென்ற நிலையில், தற்போது இரண்டு புலிகள் அடுத்தடுத்துக் கடந்த நிகழ்வு இயற்கை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வனவிலங்கு நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் பயணிகள் வாகனங்களை விட்டுக் கீழே இறங்காமலும், விலங்குகளுக்கு இடையூறு விளைவிக்காமலும் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in