குடிமகன்களுக்கு ஷாக்.. 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்..! கலெக்டர் அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

குடிமகன்களுக்கு ஷாக்.. 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்..! கலெக்டர் அதிரடி உத்தரவு..!!

Published

on

தேவர் ஜெயந்தி மற்றும் மருது பாண்டியர் குருபூஜையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் மூன்று நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதன்படி, வரும் அக்டோபர் 27, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மதுபானக் கடைகளும், அவற்றுடன் இணைந்த தனியார் பார்களும் முழுமையாகச் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in