“குடிமகனின் குமுறல்”குவாட்டருக்கு 5 ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்டதால்டாஸ்மாக் ஊழியருக்கு இளைஞர் குடுத்த தரமான பதிலடி… டாஸ்மாக் பொருளை அள்ளிக்கொண்டு ஓடிய இளைஞர்…!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

“குடிமகனின் குமுறல்”குவாட்டருக்கு 5 ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்டதால்டாஸ்மாக் ஊழியருக்கு இளைஞர் குடுத்த தரமான பதிலடி… டாஸ்மாக் பொருளை அள்ளிக்கொண்டு ஓடிய இளைஞர்…!!

Published

on

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைக்கு இளைஞர் ஒருவர் மது வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு குவாட்டர் மது பாட்டிலை வாங்கிய நிலையில், அதற்கு அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதலாக 5 ரூபாய் தர வேண்டும் என கடை விற்பனையாளர் கேட்டுள்ளார். கூடுதல் பணம் கொடுத்தால் மட்டுமே மது பாட்டில் வழங்கப்படும் என்ற தொனியில் ஊழியர் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் கடும் கோபமும் அதிருப்தியும் அடைந்த அந்த இளைஞர், அரசு நிர்ணயித்த விலையை விட எதற்காக அதிகப் பணம் கேட்கிறீர்கள் எனக் கூறி கடை ஊழியருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த இளைஞர், கடையின் கவுண்டரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்காக வைக்கப்பட்டிருந்த பேடிஎம் இயந்திரத்தை சட்டென எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியேறிச் சென்றுவிட்டார்.

Advertisement

தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 5 முதல் 10 ரூபாய் வரை கூடுதலாகப் பணம் வசூலிக்கப்படுவதாக மதுப்பிரியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இத்தகைய சூழலில், கூடுதல் பணம் கேட்ட ஆத்திரத்தில் கடையிலிருந்த பணப் பரிவர்த்தனை இயந்திரத்தையே இளைஞர் தூக்கிச் சென்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in