“அவன் இருந்தா நாம சேர முடியாது..” கடன் கொடுத்தவனுடன் கட்டிலறை உறவு.. கணவனைக் கொன்ற கள்ளக்காதல் ஜோடி… நீதிமன்றம் கொடுத்த மரண அடி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அவன் இருந்தா நாம சேர முடியாது..” கடன் கொடுத்தவனுடன் கட்டிலறை உறவு.. கணவனைக் கொன்ற கள்ளக்காதல் ஜோடி… நீதிமன்றம் கொடுத்த மரண அடி..!!

Published

on

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான ஜெகதீசனை, அவரது மனைவி நதியா மற்றும் கள்ளக்காதலன் கோவிந்தராசு ஆகியோர் மண்வெட்டியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2002-ல் திருமணமான ஜெகதீசன் – நதியா தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், வட்டிக்குப் பணம் வாங்கியதன் மூலம் கீழ்மாம்பட்டைச் சேர்ந்த கோவிந்தராசுவுடன் நதியாவிற்குத் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பணிபுரிந்து வந்த ஜெகதீசன் இதுகுறித்து அறிந்து ஊருக்குத் திரும்பி இருவரையும் கடுமையாக எச்சரித்த போதிலும், தங்களது சந்திப்பிற்குத் தடையாக இருந்த ஜெகதீசனைத் தீர்த்துக்கட்ட நதியாவும் அவரது கள்ளக்காதலனும் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த 2021 செப்டம்பர் 18 அன்று ஏற்பட்ட ஒரு கடுமையான வாக்குவாதத்தின் போது, நதியாவும் கோவிந்தராசுவும் இணைந்து ஜெகதீசனை மண்வெட்டியால் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்தனர். இக்கொடூர சம்பவம் தொடர்பாகப் பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி விசாரணையில், இருவர் மீதான குற்றமும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிகள் நதியா மற்றும் கோவிந்தராசு ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சரஸ்வதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in