“இப்படியொரு நாடகமா..? 10 ஆம் வகுப்பு மாணவி பாலியல் கொடுமைப் புகாரில் மெகா ட்விஸ்ட்… விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“இப்படியொரு நாடகமா..? 10 ஆம் வகுப்பு மாணவி பாலியல் கொடுமைப் புகாரில் மெகா ட்விஸ்ட்… விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!

Published

on

சென்னை வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் உள்ள கண்டிகை அரசுப் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் பரவிய தகவல், தேர்வுக்குப் பயந்து அந்த மாணவி ஆடிய நாடகம் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. முன்னதாக, கழிவறைக்குச் சென்ற போது முகத்தை மூடி வந்த மர்ம நபர் பாலியல் தொல்லை அளித்ததால் மயங்கி விழுந்ததாக அந்த மாணவி கூறியதை அடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் மற்றும் மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர் நடத்திய தீவிர மருத்துவப் பரிசோதனையில், மாணவிக்கு எவ்வித பாலியல் தொல்லையும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதுடன், தேர்வுக்குப் பயந்தே அவர் அவ்வாறு பொய் கூறினார் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வதந்தி பரவியதால் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள், கைகளில் பதாகைகளை ஏந்தி இன்று காலை பள்ளி முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் திடீர் போராட்டத்தின் காரணமாக வண்டலூர் முதல் கேளம்பாக்கம் வரை வாகனங்கள் முற்றிலும் ஸ்தம்பித்து, அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாணவி நாடகமாடிய உண்மை விபரம் தெரிந்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தாழம்பூர் போலீஸார் தற்போது சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in