“அம்மாடியோ.. மாட்டின் வயிற்றில் 15 நாட்கள் இருந்த 30 கிராம் தங்கம்…” அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களையே அலறவிட்ட ‘அந்த’ பொருட்கள்.. திடுக்கிட வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மாடியோ.. மாட்டின் வயிற்றில் 15 நாட்கள் இருந்த 30 கிராம் தங்கம்…” அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களையே அலறவிட்ட ‘அந்த’ பொருட்கள்.. திடுக்கிட வைக்கும் பின்னணி..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் தாலுகாவில் உள்ள வன்பத் கிராமத்தில், போலா பண்டிகை வழிபாட்டின் போது விவசாயி ஒருவரின் வளர்ப்பு மாடு, நெய்வேத்தியப் பிரசாதத்துடன் தட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 கிராம் தங்கச் சங்கிலியை அப்படியே விழுங்கிய விசித்திரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. விவசாயி சிவாஜி போர்சே என்பவருக்கு இரண்டு காளை மாடுகள் இருந்ததால், தங்க நகையை எந்த மாடு விழுங்கியது என்ற குழப்பத்தில் அவர் தவித்துள்ளார். உடனடியாக இரு மாடுகளையும் சாலிஸ்கானில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது, குறிப்பிட்ட ஒரு மாட்டின் வயிற்றில் நகை இருப்பது துல்லியமாகக் கண்டறியப்பட்டது.

மாட்டின் செரிமானப் பகுதியில் தங்கம் சிக்கியிருந்த இடத்தை அறிந்த கால்நடை மருத்துவர்கள், சுமார் 15 நாட்கள் தீவிரக் கண்காணிப்பிற்குப் பிறகு அந்த மாட்டிற்கு ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து தங்கச் சங்கிலியைப் பத்திரமாக மீட்டெடுத்தனர். இந்த அறுவை சிகிச்சையின் போது அந்த மாட்டின் வயிற்றில் இருந்து தங்க நகையோடு சேர்த்து டென்னிஸ் பந்து அளவிலான இரண்டு பிளாஸ்டிக் பந்துகள், நைலான் கயிறு மற்றும் இரண்டு 1 ரூபாய் நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டது மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியது. தற்போது மாடு முற்றிலும் நலமுடனும் ஆரோக்கியத்துடனும் உள்ள நிலையில், தனது பிரியமான மாட்டின் உயிரும் தப்பி, தொலைந்த நகையும் சேதமின்றி திரும்பக் கிடைத்ததால் விவசாயி சிவாஜி போர்சேவின் குடும்பத்தினர் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in