“அங்கன்வாடியில் நடந்த படுபயங்கரம்..” 2.5 வயதுப் பெண் குழந்தையை சாக்குப்பையில் கடத்திய தம்பதி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“அங்கன்வாடியில் நடந்த படுபயங்கரம்..” 2.5 வயதுப் பெண் குழந்தையை சாக்குப்பையில் கடத்திய தம்பதி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் ரீவாவில் உள்ள சமன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதரியா பஸ்தி பகுதியில், குழந்தை இல்லாத தம்பதி ஒன்று தங்களுக்குக் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் இரண்டரை வயது பெண் குழந்தையைக் கடத்திச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கூலி வேலை செய்யும் பெண் ஒருவரின் மகள், தனது சகோதரனுடன் அங்கன்வாடி மையத்திற்குச் சென்றிருந்த போது கடத்தப்பட்டுள்ளாள். வேலை முடிந்து வீடு திரும்பிய தாய், குழந்தையைக் காணாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரின் விசாரணையில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் அருகில் வசிக்கும் பெண் ஆகியோரின் உதவியுடன், கேசகலி கோல் மற்றும் அவரது கணவர் ரவிசங்கர் மாளவியா ஆகியோர் அந்தக் குழந்தையை ஒரு சாக்குப்பையில் அடைத்து, சீதி மாவட்டத்தில் உள்ள தநேத் கிராமத்திற்கு ரகசியமாகக் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, நள்ளிரவில் தனிப்படை அமைத்துச் சென்ற ரீவா போலீஸார், தநேத் கிராமத்தில் இருந்து குழந்தையைப் பத்திரமாக மீட்டு அவளது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த அநாகரிகமான கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய தம்பதியினர் மற்றும் அவர்களுக்கு உதவிய இரு பெண்கள் உட்பட மொத்தம் நான்கு பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in