அய்யயோ பார்க்கவே பதறுது மனசு… 6 மாதக் குழந்தையை ஈவு இரக்கமின்றி… கோவில் வாசலில் தூக்கி எறிந்த கொடூரன்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யயோ பார்க்கவே பதறுது மனசு… 6 மாதக் குழந்தையை ஈவு இரக்கமின்றி… கோவில் வாசலில் தூக்கி எறிந்த கொடூரன்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

Published

on

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள புகழ்பெற்ற சௌகன்னி மாதா கோவில் வாசலில், 6 மாதக் பெண் குழந்தை ஒன்றை ஒரு நபர் கொடூரமாகத் தரையில் தூக்கிப் போட்டுவிட்டுத் தப்பியோடிய நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழைய குருகிராமின் பஸாய் பகுதியில் உள்ள விஸ்வகர்மா காலனியில் வியாழக்கிழமை இரவு 9:30 மணியளவில் இந்த கொடூரமான மனிதநேயமற்ற செயல் அரங்கேறியுள்ளது.

கோவில் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த முழுச் சம்பவமும் பயங்கரமாகப் பதிவாகியுள்ளது. அதில், அடையாளம் தெரியாத ஒரு நபர் அந்தக் குழந்தையைத் தனது கைகளில் ஏந்தி வந்து, யாரும் எதிர்பாராத விதமாகத் திடீரெனக் கோவில் வாசலின் பலத்த தரைப்பகுதியில் குழந்தையைத் தூக்கி எறிந்துவிட்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓடித் தப்பிப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதலில் அந்தக் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

https://dainik.bhaskar.com/TwODPjQmI6b

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செக்டார்-10ஏ காவல் நிலைய போலீசார், கியூட்டான அந்தக் குழந்தையை மீட்டு உடனடியாக செக்டார்-10 குடிமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உரிய சிகிச்சைக்குப் பிறகு குழந்தை தப்ப பிழைத்ததை அடுத்து, தற்போது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்ட மர்ம நபர் யார், அவருக்கும் குழந்தைக்குமான தொடர்பு என்ன என்பது குறித்து போலீசார் சிசிடிவி ஆதாரங்களை வைத்துக் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in