CRIME
“இந்த வயசுல இதெல்லாம் தேவையா..?” ரீல்ஸுக்கு அடிமையாகி ஆஸ்பத்திரியில் 75 வயது பாட்டி செய்த செய்த காரியத்தால் அதிர்ந்த மருத்துவர்கள்.. பகீர் பின்னணி..!!
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் 75 வயது மூதாட்டி ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பதற்குத் தீவிரமாக அடிமையாகி, சாப்பாட்டைத் தவிர்த்துப் பொருட்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் பொழுதுபோக்கிற்காக ரீல்ஸ் பார்க்கத் தொடங்கிய அந்த மூதாட்டி, நாளடைவில் பசி, தாகம் கூடத் தெரியாமல் மணிக்கணக்கில் செல்போனிலேயே மூழ்கியதால் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது; குடும்பத்தினர் அவரிடமிருந்து செல்போனை வாங்க முயன்றபோது ஆத்திரமடைந்த அவர் வீட்டிலிருந்த பொருட்களைத் தூக்கி எறிந்து ரகளை செய்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதே அங்கு இருந்த 5 நோயாளிகளின் செல்போன்கள் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது; நிர்வாகம் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த 75 வயது மூதாட்டிதான் 5 போன்களையும் திருடித் தனது பைக்குள் மறைத்து வைத்திருந்தது அம்பலமானது. சுமார் 15 நாட்கள் அளிக்கப்பட்ட தொடர் மனநல சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சிறுவர்கள் மட்டுமின்றி வீட்டிலுள்ள பெரியவர்களும் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் குடும்பத்தினர் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாகக் கவனிக்க வேண்டும் என மனநல மருத்துவர் டாக்டர் மெராஜ் காத்ரி எச்சரித்துள்ளார்.
