CRIME
“அநியாயத்தின் உச்சம்.. வீட்டு வாசலில் பட்டாசு வெடிக்காதீங்க..” என சொன்ன தம்பதி.. கட்டிடத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாகத் தாக்கிய கும்பல்.. வெளியான பகீர் சிசிடிவி..!!
மகாராஷ்டிரம் அம்பர்நாத் கன்சாய் செக்ஷன் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்குள், வீட்டின் முன்பு பட்டாசு வெடிப்பதைத் தட்டிக்கேட்ட கணவன் மற்றும் மனைவியை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 10-ஆம் தேதி இரவு, தங்கள் வீட்டின் வாசலில் பட்டாசு வெடிப்பதற்கு அந்தப் பெண் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சிலர், அத்துமீறி உள்ளே புகுந்து தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கட்டிடத்திற்குள் புகுந்த அந்தக் கும்பல், கணவன் மற்றும் மனைவி இருவரையும் கண்மூடித்தனமாகத் தாக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. தற்போது இந்தச் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
