“திருமண நிகழ்ச்சியில் மரண ஓலம்”கொடைக்கானல் மலைப்பாதையில் நள்ளிரவில் நடந்த விபத்து… 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 3 பேர் பலி… 16 பேர் படுகாயம்…!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

“திருமண நிகழ்ச்சியில் மரண ஓலம்”கொடைக்கானல் மலைப்பாதையில் நள்ளிரவில் நடந்த விபத்து… 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 3 பேர் பலி… 16 பேர் படுகாயம்…!!

Published

on

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் – பழனி மலைப்பாதையில் உள்ள சாவரிக்காடு அருகே நேற்று இரவு 24 பயணிகளுடன் சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி, 100 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் நேராகக் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 16 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பழனி மதீனா நகர் மற்றும் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இந்தப் பயணிகள், கொடைக்கானல் முஞ்சிக்கல் அருகே நடைபெற்ற திருமண வரவேற்பு மற்றும் திருமணத்திற்குப் பிந்தைய நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இரவில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மலைப்பாதையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் பாய்ந்ததால், மகிழ்ச்சியாகத் திரும்பிய குடும்பத்தினருக்கு இடையே பெரும் சோகம் சூழ்ந்துள்ளது.

Advertisement

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், பழனி மற்றும் கொடைக்கானல் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து பள்ளத்தில் இறங்கி மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in