“சுடவே இல்ல… துப்பாக்கி சூட்டின் போது எடுத்த அந்த ஒரே ஒரு போட்டோ… மன உளைச்சல்ல உயிரையே விட்ட தூத்துக்குடி காவலர்..!!” – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

“சுடவே இல்ல… துப்பாக்கி சூட்டின் போது எடுத்த அந்த ஒரே ஒரு போட்டோ… மன உளைச்சல்ல உயிரையே விட்ட தூத்துக்குடி காவலர்..!!”

Published

on

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி அன்று நடைபெற்ற போராட்டத்தின் 100-வது நாளையொட்டி, போராட்டக்காரர்கள் தூத்துக்குடியில் இருந்து பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து துப்பாக்கி சூடு நடைபெற்றதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு உணவு வழங்குவதற்காக சென்றவர் ஆயுதப்படை போலீஸ்காரர் ராஜா. துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது, ராஜா துப்பாக்கியை கையில் ஏந்தியபடி போலீஸ் வாகனத்தின் மீது நின்றிருந்த புகைப்படம் வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. இந்தப் புகைப்படம் காரணமாக ராஜா குறித்து பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மனவருத்தம் ஏற்பட்டதாகவும், ராஜாவும் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இதற்கிடையே, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தியது. அந்த விசாரணை அறிக்கையில், காவலர் ராஜா துப்பாக்கியை கையில் வைத்தபடி வாகனத்தின் மீது நின்று போஸ் கொடுத்தது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர் துப்பாக்கியால் சுடவில்லை என்றும், அவரது துப்பாக்கி சூட்டால் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் போலீஸ்காரர் ராஜா, கடந்த சில நாட்களாக கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார். இறந்த போலீஸ்காரர் ராஜாவின் உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறை மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in