“குட் நியூஸ்… யாருக்கும் ரேஷன் பொருளை நிறுத்தக் கூடாது…” ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசு கொடுத்த மாஸ் அப்டேட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“குட் நியூஸ்… யாருக்கும் ரேஷன் பொருளை நிறுத்தக் கூடாது…” ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசு கொடுத்த மாஸ் அப்டேட்..!!

Published

on

எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ கூடாது என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அரசு 6 மாதங்களுக்கு மேல் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வாங்காத முன்னுரிமை (PHH) குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை அக்டோபர் 1, 2026 முதல் தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களின் கைவிரல் ரேகை சரிபார்ப்பு சதவீதம் 96.69 ஆகும். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் மே 10, ஆகஸ்ட் 2, 8, 9, 29 மற்றும் செப்டம்பர் 19, 26 ஆகிய தேதிகளில் கைவிரல் ரேகை பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலமாக, ஜூலை மாதத்தில் 95.44 சதவீதமாக இருந்த கைவிரல் ரேகை சரிபார்ப்பு, செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி 96.69 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், 4,49,663 PHH மற்றும் AAY திட்டப் பயனாளிகள் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர்.

Advertisement

எனினும், இதுவரை கைவிரல் ரேகை பதிவினை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள், நியாயவிலைக் கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்லும்போது, கைவிரல் ரேகை அல்லது கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் தங்களது கைவிரல் ரேகை தகவல்களை விரைந்து பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in