“இதையெல்லாம் எப்படி நாங்க பயன்படுத்துறது..?” ரேஷன் மண்ணெண்ணெயை ஊற்றியதும் கூச்சல் போட்ட மக்கள்… தென்காசியில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதையெல்லாம் எப்படி நாங்க பயன்படுத்துறது..?” ரேஷன் மண்ணெண்ணெயை ஊற்றியதும் கூச்சல் போட்ட மக்கள்… தென்காசியில் பரபரப்பு..!!

Published

on

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள வடமலைப்பட்டி நியாயவிலைக் கடையில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெயில் கழிவுநீர் கலந்துள்ளதாகக் கூறி அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ரேஷன் கடையில் வாங்கிய மண்ணெண்ணெயைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து அதிகாரிகளிடம் உடனடியாகப் புகாரளித்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

பொதுமக்களின் இந்த புகார் தொடர்பாகக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் நரசிம்மன் உடனடியாக விளக்கம் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து விரைவாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை ஊழியர்களிடம் எழுத்துப்பூர்வமான விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், நடத்தப்பட்டு வரும் விசாரணை முழுமையாக முடிந்ததும், இந்த முறைகேடு அல்லது அலட்சியத்தில் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இணைப் பதிவாளர் நரசிம்மன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in