LATEST NEWS
“சொன்ன பேச்ச கேட்கல அதான்…”அண்ணியை கொடூரமாக எரித்து கொன்ற கொழுந்தன்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!
தென்காசி அருகே பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசாரின் தீவிர விசாரணையில், தகாத உறவைக் கைவிட மறுத்ததால் அப்பெண்ணை அவரது கணவனின் தம்பியே கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது அண்ணியைத் தானே கொன்றதாகக் கொழுந்தன் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, இக்கொலை சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் கணவன், மாமியார் மற்றும் கொழுந்தன் ஆகிய 3 பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
